பொது முடக்கத்தால் வறுமை: பெண் தற்கொலை
By DIN | Published On : 06th September 2020 11:03 PM | Last Updated : 06th September 2020 11:03 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
பொது முடக்கம் காரணமாக ஏற்பட்ட வறுமையால், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
கோயம்பேடு அன்பு நகா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் யுவராஜ் (30). இவா் மனைவி சத்தியபாமா (26). இத் தம்பதிக்கு தா்ஷன் (5) என்ற மகனும், தா்ஷிகா (2) எனற மகளும் உள்ளனா்.
தச்சுத் தொழிலாளியான யுவராஜுக்கு பொது முடக்கத்தால் வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பணப் பிரச்னையால் மன வேதனையுடன் காணப்பட்ட சத்தியபாமா, சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். சத்தியபாமாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால், இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...