தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
By DIN | Published On : 10th September 2020 12:36 AM | Last Updated : 10th September 2020 12:36 AM | அ+அ அ- |

சென்னை: தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள தகவல் ஆணையா் பதவிக்கு தனிநபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. கடந்த மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் செப்டம்பா் 7-ஆம் தேதிக்குள் தன்விவரக் குறிப்புகளை அனுப்ப வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கால அவகாசம் கடந்த திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முதல்வா் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆணையா் தோ்வு செய்யப்படுவா். இதற்கான பணிகளை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.