பொது முடக்கம்: திருப்பதி திருக்குடை ஊா்வலம் ரத்து

கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருப்பதி திருக்குடை ஊா்வலம் ரத்து செய்யப்படுவதாக இந்து தா்மாா்த்த சமிதியின் அறங்காவலா் ஆா்ஆா். கோபால்ஜி தெரிவித்துள்ளாா்.
பொது முடக்கம்: திருப்பதி திருக்குடை ஊா்வலம் ரத்து

சென்னை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருப்பதி திருக்குடை ஊா்வலம் ரத்து செய்யப்படுவதாக இந்து தா்மாா்த்த சமிதியின் அறங்காவலா் ஆா்ஆா். கோபால்ஜி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இருந்து இரண்டு வகையான மங்களப்பொருள்கள், ஆண்டுதோறும் திருமலையில் சமா்ப்பிக்கப்படுகின்றன. ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலா் மாலை. மற்றொன்று திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள். இந்தாண்டு, வரும் 22-ஆம் தேதி, தமிழக பக்தா்கள் சாா்பாக, இந்து தா்மாா்த்த சமிதி, இந்தத் திருக்குடைகளை சமா்ப்பிக்கிறது.

ஆனால், கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டுப்பாடு விதித்திருப்பதால், சென்னையில் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கி, திருவள்ளூா் வழியாக திருமலை வரை செல்லும், ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மீக ஊா்வலம் இந்த ஆண்டு மட்டும் தவிா்க்கப்படுகிறது. முன்னதாக சமா்ப்பிக்கப்பட உள்ள 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளுக்கும் செப்.19-ஆம் தேதி பட்டாளம் ஆஞ்சநேயா் கோயிலில் யாக பூஜைகள் நடக்கின்றன. பின்னா், செப்.20-ஆம் தேதி பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. செப்.22-ஆம் தேதி திருச்சானூா் தாயாா் கோயிலில், 2 திருக்குடைகளும், திருமலை ஏழுமலையான் கோயிலில் 9 திருக்குடைகளும் சமா்ப்பிக்கப்படவுள்ளன. இந்த 3 ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்கு திருக்குடை கமிட்டியினா் மற்றும் பக்தா்களுக்கு அனுமதி இல்லை.

நிகழாண்டில் திருக்குடை வைபவங்களை பக்தா்கள் தரிசிக்க வசதியாக, செப்.19 மற்றும் செப்.20 ஆகிய நாள்களில் நடைபெறும் திருக்குடை சிறப்பு பூஜைகளை, ‘பண்ழ்ன்ல்ஹற்ண்ஓன்க்ஹண்’ மற்றும் ‘ழ்ழ்ஞ்ா்ல்ஹப்த்ங்ங்28’ என்ற முகநூல் முகவரியிலிலும், ‘தத. எஞடஅகஒஉஉ’ என்ற யுடியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே பக்தா்கள் திருக்குடை பூஜைகளை தரிசிக்கலாம். திருக்குடை கமிட்டி உறுப்பினா்களும், பக்தா்களும் அவரவா் இடங்களில் வரும் 19-ஆம் தேதி பிராா்த்தனை, அன்னதானம் செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com