ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் போட்டிகள்: செப்.30}க்குள் படைப்புகளை அனுப்பலாம்

ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் "மறத்தல் தகுமோ' என்ற தலைப்பில் நடைபெறும்  இணையவழிப் போட்டிகளுக்கு, செப்.30}ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என

சென்னை: ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் "மறத்தல் தகுமோ' என்ற தலைப்பில் நடைபெறும்  இணையவழிப் போட்டிகளுக்கு, செப்.30}ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து "எஸ்' அறக்கட்டளையின் அறங்காவலர் வழக்குரைஞர் சுமதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும் தியாகத்தையும், மாணவர்கள், இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், "எஸ்' அறக்கட்டளையானது, "மறத்தல் தகுமோ' என்ற தலைப்பில், ஆண்டுதோறும் பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. 
 இந்த ஆண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஓவியப் போட்டி, பதாகை தயாரிப்பு, புதுமொழி போட்டி (ஸ்லோகன்), தனித் திறன் வெளிப்பாடு (காணொலி) ஆகிய போட்டிகள், கரோனா நோய்த் தொற்று காரணமாக இணைய வழியில் நடைபெறவுள்ளன. மாணவர்கள் தங்களது படைப்புகளை தமிழ், அல்லது ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கலாம்.  முதல் மூன்று சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டிகள் குறித்த முழு விவரங்களும், https://sfoundationIndia.wordpress.com/online-competitions-2020 என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். போட்டிகளுக்கான படைப்புகளை செப்.30}ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, sfoundationinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com