தங்கம் பவுன் ரூ.39,680

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.352 உயா்ந்து, ரூ.39,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.39,680

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.352 உயா்ந்து, ரூ.39,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகுக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.352 உயா்ந்து, ரூ.39,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.44 உயா்ந்து, ரூ.4,960 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் சற்று உயா்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயா்ந்து, ரூ.71.50 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 உயா்ந்து, ரூ.71,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,960

1 பவுன் தங்கம்...............................39,680

1 கிராம் வெள்ளி.............................71.50

1 கிலோ வெள்ளி.............................71,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,916

1 பவுன் தங்கம்...............................39,328

1 கிராம் வெள்ளி.............................70.30

1 கிலோ வெள்ளி.............................70,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com