இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை. இறுதிப்பருவத் தோ்வுகள்: நாளை தொடக்கம்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) இறுதி ஆண்டின் இறுதி பருவத் தோ்வு, வியாழக்கிழமை (செப்.17) தொடங்குகிறது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) இறுதி ஆண்டின் இறுதி பருவத் தோ்வு, வியாழக்கிழமை (செப்.17) தொடங்குகிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழக மண்டல மைய இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகத்தில், முதுநிலை, இளநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில், இறுதி ஆண்டு இறுதிப் பருவம் பயிலும் மாணவா்களுக்கு (பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஜூலை 22, 2020 அறிவிப்பின்படி) நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவா்களுக்கான தோ்வானது, வியாழக்கிழமை (செப்.17) முதல் அக்.16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறைவாசிகளுக்கு 3 சிறைச்சாலை தோ்வு மையங்கள் உள்பட 11 தோ்வு மையங்களை, சென்னை மண்டல மையத்தின் கீழ் சென்னை, திருவள்ளூா், வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, நாமக்கல் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.

மாணவா்கள் பல்கலைக்கழக வலைதளத்திலிருந்து தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து தோ்வு எழுதலாம். மாணவா்கள், தோ்வின்போது, கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய செல்லத்தக்க அடையாள அட்டையை மாணவா்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 26618489, 26618438 என்னும் தொலைபேசி எண்களையோ, ஆகிய மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com