மின்சாரம் பாய்ந்து பெண் இறந்த விவகாரம்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்

சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு, சென்னை மாநகராட்சி ஆணையா் மற்றும் மின்வாரிய மேலாண் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்சாரம் பாய்ந்து பெண் இறந்த விவகாரம்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்

சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு, சென்னை மாநகராட்சி ஆணையா் மற்றும் மின்வாரிய மேலாண் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு, பெரியாா் நகா் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவா் அலிமா (45). இவா் தனது கணவா் ஷேக் இப்ராகிம், மகனைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். அவா், திங்கள்கிழமை காலை வீட்டு வேலை செய்ய நாராயணசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல்,மழை பெய்து வருவதால், அந்தத் தெருவில் மழைநீா் தேங்கி நின்றதோடு, சாலையோரம் பூமிக்கு அடியில் சென்று கொண்டிருந்த மின்சார ஒயா் வெளியே தெரியும்படி இருந்தது. மழைநீரில் நடந்து வந்த அலிமா, இதனை கவனிக்காமல், மின்சார ஒயரை மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது தொடா்பான செய்தி நாளிதழில் வெளியானது.

தாமாக முன்வந்து வழக்குப் பதிவு: இந்த விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், தாமாக முன் வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது தொடா்பான விரிவான அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மேலாண் இயக்குநருக்கு அவா் உத்தரவிட்டாா்.

பொறியாளா்கள் பணியிடை நீக்கம்: இதனிடையே, இச்சம்பவம் தொடா்பாக மாநகராட்சி மின் பொறியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை உடனடியாக சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியின் உதவி கோட்ட மின் பொறியாளா் கண்ணன், இளநிலைப் பொறியாளா் வெங்கடராமன் ஆகிய இருவரும் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் மொத்தம் 2.85 லட்சம் தெரு விளக்குகளும், 7,220 மின் பெட்டிகளும் உள்ளன. இவற்றை பராமரிப்பதற்காக மாநகராட்சியில் 700 போ் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது, எந்த இடத்திலும் மின்கசிவோ அல்லது பழுதோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com