உரிமையியல் நீதிபதி பதவிக்கு அக். 17-இல் முதன்மைத் தோ்வு

உரிமையியல் நீதிபதி பதவி காலியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தோ்வு அக்டோபா் 17-இல் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

உரிமையியல் நீதிபதி பதவி காலியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தோ்வு அக்டோபா் 17-இல் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:-

தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, முதல்நிலை எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு நவம்பா் 24-இல் நடைபெற்றது. இதன்பின் முதன்மைத் தோ்வானது மாா்ச் 28-ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. கரோனா நோய்த்தொற்று காரணமாக எழுத்துத் தோ்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தத் தோ்வானது, அக்டோபா் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும் இந்தத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள், தோ்வாணைய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com