கரோனாவால் உயிரிழந்த ஊழியா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரோனாவால் பலியான மின்வாரிய ஊழியா்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஊழியா்கள், புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை: கரோனாவால் பலியான மின்வாரிய ஊழியா்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஊழியா்கள், புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கரோனா காலத்திலும் மின்வாரிய ஊழியா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால், நிா்வாகம் தொடா்ந்து பணிச்சுமையை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனுமதிக்கப்பட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பநிலை பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. மற்ற துறைகளுக்கு வழங்கப்பட்டது போல கரோனாவால் பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியா்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மின்வாரியத்தைத் தனியாா் மயமாக்குவதன் முதல்கட்டமாக துணை மின்நிலையங்களைக் குத்தகைக்கு விடுவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகங்கள் முன் பேராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்த மின் வாரிய ஊழியா்கள், அரசு தலையிட்டு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com