தேசிய கல்விக் கொள்கை போட்டிகள்: வித்யா பாரதி நடத்துகிறது 

தேசிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை வரும் 24-ஆம் தேதி முதல் அக்.2-ஆம் தேதி வரை வித்யா பாரதி

சென்னை: தேசிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை வரும் 24-ஆம் தேதி முதல் அக்.2-ஆம் தேதி வரை வித்யா பாரதி கல்வி அமைப்பு அறிவித்துள்ளது.

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள், பொதுமக்கள் என மூன்று பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட  13 மொழிகளில் இந்தப் போட்டிகள்  நடத்தப்பட உள்ளன. இணையவழி வினாடி-வினா போட்டி 24-ஆம் தேதி தொடங்கும். அதேபோல, சமூக வலைதளங்களில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பதிவுகளை இடும் போட்டி, 25-ஆம் தேதி தொடங்கும்.
மேலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2 நிமிஷ பேச்சு, கையால் செய்யப்படும் பதாகைகள், பிரதமருக்கு கடிதம் எழுதுதல், 300 வார்த்தைகளில் கட்டுரை, மீம் தயாரித்தல் ஆகிய போட்டிகளும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறும்படம் தயாரித்தல், டிஜிட்டல் போஸ்டர் தயாரித்தல், கையால் செய்யப்பட்ட சுவரொட்டி ஓவியம், குறைந்தபட்சம் 8 சுட்டுரைப் பதிவுகள், மீம் தயாரித்தல் ஆகிய போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு மொழியிலும் தலா முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.3,000, பத்து சிறப்புப் பரிசுகள் ரூ.1,000 வழங்கப்படும் என்றும், மேலும், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ய விளம்பர தூதர்களாகப் பதிவு செய்து கொள்ளவும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ம்ஹ்ய்ங்ல்.ண்ய் என்ற
வலைதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com