தூய்மை வாரம்- ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி தீவிரம்

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், தூய்மை வாரம் வரும் 30-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது.


சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், தூய்மை வாரம் வரும் 30-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ரயில் நிலையங்கள், ரயில்கள், ரயில் பணிமனைகளில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில், செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு தூய்மை வாரமாகக் கடைபிடிக்கப்படவுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை (செப்.16) நடைபெற்றது. விழாவில், சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ரயில்வே ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இது குறித்து சென்னை ரயில்வே அதிகாரிகள் கூறியது:

தூய்மை வாரத்தையொட்டி, ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ரயில் நிலையங்கள், ரயில்கள், வேலை செய்யும் இடங்கள் என்று பிரத்யேகமாக தூய்மை வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், தனியாா் நிறுவனங்கள், சாரண-சாரணியா், ரயில்வே ஊழியா்கள் மற்றும் வா்த்தகா்களுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனா். தூய்மை வார கொண்டாட்டத்தில் கலந்துரையாடல்கள், பயிற்சி பட்டறைகள், குறுநாடகங்கள், கண்காட்சிகள், மரம் நடும் விழா ஆகிய நிகழ்வுகள் ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகங்களில் நடைபெறவுள்ளன.

இந்த தூய்மை வாரத்தில், ரயில் நிலையங்களில் தூய்மையை எப்படி பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணா்வை ரயில் பயணிகளிடம் ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com