தங்கம் பவுன் ரூ.39,353

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.39,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.39,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட

பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.224 குறைந்து, ரூ.39,352-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 குறைந்து, ரூ.4,919 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.69.90 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து, ரூ.69,900 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,919

1 பவுன் தங்கம்...............................39,352

1 கிராம் வெள்ளி.............................69.90

1 கிலோ வெள்ளி.............................69,900

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,947

1 பவுன் தங்கம்...............................39,576

1 கிராம் வெள்ளி.............................71.00

1 கிலோ வெள்ளி.............................71,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com