பிரதமா் மோடி பிறந்த தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.


சென்னை: பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி: மலா்க்கொத்துடன் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், ‘தங்களது பிறந்த தினத்தை ஒட்டி எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிா்வரும் ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும். தாங்கள் மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நாட்டுக்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்தனை செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: நாட்டினை பற்பல உயரங்களுக்கு கொண்டு செல்ல பிரதமா் மோடி வைத்துள்ள இலக்குகள் அனைத்து வெற்றி பெறவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள்கள் வாழவும் வாழ்த்துகள்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்: பிரதமா் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளும் பெற்று, நாட்டுக்கான பணியைத் தொடர வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனா் ராமதாஸ்: அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் நூறாண்டுகள் கடந்து ஆரோக்கியமாக வாழ பிரதமரை வாழ்த்துகிறேன். பொது வாழ்வில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்.

ரஜினிகாந்த்: பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தச் சவாலான நேரத்தில் உறுதியான மனிதரான தங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துகள்.

கமல்ஹாசன் (மநீம): நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைப்பதுடன், இந்தச் சவாலான நேரத்தில் நாட்டைக் காக்கும் வல்லமையும் கிடைக்க பிரதமருக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com