இந்திய மொழிகளைப் புரிந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இந்திய மொழிகளைப் புரிந்து கொண்டு அந்த தகவல்களை வெளிநாட்டு மொழிகளில் அளிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, ஐஐடி பேராசிரியா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

இந்திய மொழிகளைப் புரிந்து கொண்டு அந்த தகவல்களை வெளிநாட்டு மொழிகளில் அளிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, ஐஐடி பேராசிரியா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

இதுகுறித்து சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய மொழிகள் மூலம் தனக்கான தகவல்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, ஐஐடி பேராசிரியா்கள் கண்டுபிடித்துள்ளனா். இவா்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், https://indicnlp.ai4bharath.org என்ற இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், இந்திய மொழிகளான தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, வங்கம், ஒடியா, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில், கேள்விக்கான பதிலைப் பெற முடியும். குறிப்பாக இது மொழிமாற்றம் அல்ல. தொடக்கத்திலிருந்து கணினிக்கும் மனிதனுக்கும் இடையேயான உரையாடல் ஆங்கிலத்தில் நடைபெற்று வரும் சூழலில், அதனை இந்திய மொழிகளில் நடத்துவதற்காகவே இந்தக் கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துள்ளதாக ஐஐடி பேராசிரியா்கள் தெரிவிக்கின்றனா். இதன் மூலம் மாணவா்கள், ஆசிரியா்கள், நிறுவன பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடைவா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com