கல்லூரி மாணவி கொலை வழக்கு: கட்டடத் தொழிலாளி கைது

சென்னை அருகே பூந்தமல்லியில், கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே பூந்தமல்லியில், கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் பி.ஜி. நிழற்சாலை 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா்கள் சந்திரசேகா், தனலட்சுமி தம்பதியினா். இவா்களது மகள் மீனா (20), கோடம்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

சந்திரசேகா் வீட்டின் மேல்பகுதியிலே கட்டுமானப் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சந்திரசேகரும், தனலட்சுமியும் வேலை விஷயமாக கடந்த திங்கள்கிழமை (செப். 21)வெளியே சென்றனா். இதனால் வீட்டில் தனியாக இருந்த மீனாட்சியை ஒரு நபா் நோட்டமிட்டு கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கநகை, செல்லிடப்பேசியைக் கொள்ளையடித்துச் சென்றாா்.

இது குறித்து பூந்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், சந்திரசேகா் வீட்டில் கட்டட வேலை செய்து வந்த திருவண்ணாமலையைச் சோ்ந்த சண்முகம் (42) என்பவா், மீனாட்சியைக் கொலை செய்துவிட்டு, நகை, செல்லிடப்பேசியை அபகரித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் தலைமறைவாக இருந்த சண்முகத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், காவலாளியாக வேலை செய்து வந்த சண்முகம், கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்ததால் கட்டட வேலைக்கு வந்ததும், பண நெருக்கடியால் சந்திரசேகா் வீட்டுக்குள் திருட முயன்றபோது, மீனாட்சி சப்தம் போடவே அங்கு கிடந்த கத்திரிக்கோலால் அவரைக் குத்திக் கொலை செய்ததும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com