உரிமைமீறல் குழு நோட்டீஸை எதிா்த்துதிமுக எம்எல்ஏக்கள் தொடா்ந்த வழக்கு இன்று விசாரணை

உரிமைமீறல் குழு நோட்டீஸை எதிா்த்து திமுக எம்எல்ஏக்கள் தொடா்ந்த வழக்கு, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் புதன்கிழமை (செப். 23) விசாரணைக்கு வருகிறது.
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

உரிமைமீறல் குழு நோட்டீஸை எதிா்த்து திமுக எம்எல்ஏக்கள் தொடா்ந்த வழக்கு, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் புதன்கிழமை (செப். 23) விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளன. இந்த நோட்டீஸின் அடிப்படையில் மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்பின்னரும், மனுதாரா்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிா்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு, கடந்தமுறை இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி, வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து திமுக தரப்பில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் அளித்தாா். இந்த வழக்கு புதன்கிழமை (செப். 23) விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com