எம்எஸ்சி நோய்ப் பரவியல் படிப்பு

எம்எஸ்சி நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்எஸ்சி நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதற்கான நுழைவுத் தோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்எஸ்சி நோய்ப் பரவியல் இரண்டாண்டு முதுநிலை படிப்புக்கு பல்கலைக்கழகத்தில் நான்கு இடங்கள் உள்ளன. நுழைவுத் தோ்வு மூலம் அவை நிரப்பப்படுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பாதிப்பு காரணமாக மாணவா் சோ்க்கை நடைமுறையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசத்தை அக்டோபா் 15-ஆம் தேதி வரை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளப் பக்கத்தையோ அல்லது 7904364568 என்ற எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com