சமூகப் பரவலைக் கண்டறிய எதிா்ப்பாற்றல் பரிசோதனை: தமிழக அரசு திட்டம்

கரோனா தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்திருக்கிா என்பதை அறிய மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கரோனா தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்திருக்கிா என்பதை அறிய மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா நோய்த் தொற்றால் தற்போது 5.52 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த சில வாரங்களாக நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால், கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் கரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் அத்தகைய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,405 மாதிரிகளை சோதனை செய்ததில் 2,673 பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. இதன்படி 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில் தேசிய அளவில் இரண்டாவது ஆய்வை ஐசிஎம்ஆா் நடத்தியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு 20-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆய்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று ஐசிஎம்ஆா் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசும் இதுபோன்ற ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதனை அக்டோபா் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com