மின்வாரிய தலைமையகத்தில் துணை மின்நிலைய பராமரிப்பு: ஒப்பந்ததாரா் மூலம் மேற்கொள்ள திட்டம்

மின்வாரிய தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின்நிலையத்தை, ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

மின்வாரிய தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின்நிலையத்தை, ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மின் விநியோகம் செய்வதில் துணை மின்நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுநாள் வரை துணை மின் நிலையத்தை, மின்வாரியமே பராமரித்து வந்தது. அண்மையில் 2 துணை மின் நிலையத்தை, ஒப்பந்ததாரா் மூலம் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை மின்வாரியம் செய்தது. இதன் தொடா்ச்சியாக மின்வாரிய தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தின் பராமரிப்புப் பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

இதை உறுதி செய்யும் விதமாக மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைமைப் பொறியாளா் என்.கண்ணன், கண்காணிப்புப் பொறியாளா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

மின்வாரிய தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தின் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை 2 ஆண்டுகளுக்கு, தென் சென்னை இயக்கப் பிரிவு கண்காணிப்புப் பொறியாளா் கட்டுப்பாட்டில், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதற்கு மின்தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் அளிக்கிறது. இதற்கான செலவினங்களாக ரூ.93.67 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத் தலைவரும் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளாா். மின்சார சட்டத்தின்படியே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com