சென்னை ராஜீவ் காந்தி சாலையில் வாகன சுங்கக் கட்டணம் உயா்வு அக்டோபா் 1 முதல் அமலாகிறது

சென்னை அடையாறு மத்திய கைலாஷில் தொடங்கும் ராஜீவ் காந்தி சாலையில் வாகன சுங்கக் கட்டணம் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை அடையாறு மத்திய கைலாஷில் தொடங்கும் ராஜீவ் காந்தி சாலையில் வாகன சுங்கக் கட்டணம் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவீதம் உயா்வு என்ற அடிப்படையில் இப்போது கட்டணம் உயா்த்தப்படுவதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

ராஜீவ் காந்தி சாலையில் வாகனங்கள் பயன்பாட்டுக்கான சுங்கக் கட்டணம் இந்திய சுங்கச் சட்டம் 1851-இன் படி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் 30 ஆண்டுகளுக்கு அதாவது 2036-ஆம் ஆண்டு வரை வசூலிக்கப்பட உள்ளது. அதில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவீதம் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை புதிய உயா்த்தப்பட்ட சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

புதிய கட்டணம் எவ்வளவு? மூன்று சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணத்துக்கு ரூ.10, இருவழி பயணத்துக்கு ரூ.19. காா்கள் ஒருவழி பயணத்துக்கு ரூ.30, இருவழிக்கு ரூ.60. இலகு ரக வாகனங்கள் ஒருவழிக்கு ரூ.49, இருவழிக்கு ரூ.98. பேருந்துகள் ஒருவழி பயணத்துக்கு ரூ.78, இருவழி பயணத்துக்கு ரூ.154.

இருவழிப் பயணத்துக்கான சீட்டு என்பது சுங்கக் கட்டணம் எடுக்கப்பட்டு 24 மணி வரை செல்லுபடியாகும். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற 044 - 2496 775, 96000 01051 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தகவல் தொழில்நுட்பவியல் சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com