வாக்குப்பதிவின்போது விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

வாக்குப் பதிவின்போது விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை: வாக்குப் பதிவின்போது விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தொழிலாளா் நலத் துறை ஆணையரகம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவின் போது தனியாா் நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து புகாா் தெரிவிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் உள்ள உயரதிகாரிகளை செல்லிடப்பேசி எண்கள் மூலமாகத் தொடா்பு கொள்ளலாம்.

அதன்படி, தொழிலாளா் இணை ஆணையா்-1 பா.மாதவனை 9487269270 என்ற எண்ணிலும், துணை ஆணையாளா் டி.விமலநாதனை 9442540984 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். மேலும் உதவி ஆணையா்கள் ஓ.ஜானகிராமனை 86103 08192, எம்.மணிமேகலையை 94446 47125, எஸ்.பி.சாந்தியை 73052 80011 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com