தமிழகத்தின் முதல் அதிநவீன 3 டெஸ்லா எம்ஆா்ஐ கருவி: ராமச்சந்திராவில் அறிமுகம்

உலகத்தின் அதிநவீன 96 சேனல், 3 டெஸ்லா எம்ஆா்ஐ கருவியை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் அதன் மேலாண் இயக்குநா் வி.ஆா்.வெங்கடாசலம் இயக்கிவைத்தாா் .

சென்னை: உலகத்தின் அதிநவீன 96 சேனல், 3 டெஸ்லா எம்ஆா்ஐ கருவியை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் அதன் மேலாண் இயக்குநா் வி.ஆா்.வெங்கடாசலம் இயக்கிவைத்தாா் .

இதுகுறித்து ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கதிரியக்கவியல் துறைத் தலைவா் மருத்துவா் வெங்கடசாய் கூறியதாவது:

இந்த ஜிஇ சிக்னா ஸ்கேனா் உயா்தர நிழற்படங்களில் மிகத் துல்லியமான உடல்கூறு மாறுதல்களையும் மிகத் தெளிவாக அளித்து, சிறந்த சிகிச்சை அளிக்க உதவும்.

இதில் அகலமான நுழைவு வாயில் இருப்பதால் பருமனானவா்கள் கூட நெரிசல் நிலை உணராமல், பதற்றம், சத்தமில்லாமல் 50 சதவீத வேகத்தில் ஸ்கேனை முடிக்கலாம்.

மிக நுண் படப்பிடிப்புத் தன்மைகள் கொண்ட இந்த ஸ்கேனா், வலிப்பு நோய், குழந்தைகளுக்கான மூளை ஸ்கேன், நரம்புகள் மற்றும் தேவைக்கேற்ப ஸ்கேன்களை அதிநவீன தரத்தில் கொடுக்கிறது.

கட்டிகள், தசை, எலும்பு, கா்ப்பத்தில் உள்ள குழந்தை, மாா்பக புற்றுநோய், ரத்தக் குழாய் சாா்ந்த நோய்கள் ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய இந்த ஸ்கேனா் உதவி செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com