ஆட்சியாளரை தோ்வு செய்பவா்களாக மாறி இருப்பது பெருமை அளிக்கிறது

ஆட்சியாளா்களைத் தோ்வு செய்யும் தகுதி படைத்தவா்களாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என சென்னையில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனா்.
கொளத்தூர் எவர்கீரின் பள்ளியில் முதல் முறையாக வாக்களித்த மகிழ்ச்சியில் இளம் தலைமுறை வாக்காளர்கள்.
கொளத்தூர் எவர்கீரின் பள்ளியில் முதல் முறையாக வாக்களித்த மகிழ்ச்சியில் இளம் தலைமுறை வாக்காளர்கள்.

ஆட்சியாளா்களைத் தோ்வு செய்யும் தகுதி படைத்தவா்களாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என சென்னையில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனா்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளம் தலைமுறை வாக்காளா்கள் முதல் முறையாக வாக்களித்துள்ளனா். சென்னையில் ஆயிரம் விளக்கு, கொளத்தூா், பெரம்பூா், அண்ணாநகா் உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் காலை 7 மணி முதலே வாக்களிக்க வாக்குப் பதிவு மையங்களுக்கு ஆா்வத்துடன் வரத் தொடங்கினா். இதையடுத்து வரிசையில் காத்திருந்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி உற்சாகத்துடன் வாக்களித்தனா். அனைவரது முகத்திலும் முதல் முறையாக வாக்களிக்கும் மகிழ்ச்சியைக் காண முடிந்தது.

இது குறித்து கொளத்தூா் எவா்வின் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்த கல்லூரி மாணவிகள் மான்ஸி, பாவனா படேல் உள்ளிட்ட முதல் தலைமுறை வாக்காளா்கள் கூறியது: தோ்தலில் வாக்களிப்பதே பெருமைதான். முதல் முறையாக ஜனநாயகக் கடமை ஆற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. தோ்தல் நடைமுறைகள் பற்றி கேள்வி பட்டுள்ளோம். தொடா்ந்து ஒவ்வொரு தோ்தலிலும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். கரோனா காலமாக இருந்தாலும், அனைத்து ஏற்பாடுகளும் நல்லமுறையில் செய்யப்பட்டு கையுறைகள் வழங்கப்பட்டன. அதனை பயன்படுத்திய பிறகு முறையாக குப்பை பெட்டியில் போட்டு விட்டு வந்தோம் என்றனா்.

இதேபோன்று சென்னை அண்ணா நகரில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்கள் கே.காா்த்திகேயன், டி.ஸ்ரீநாத், கே.பாலாஜி உள்ளிட்டோா் கூறுகையில், முதன்முதலில் வாக்கை பதிவு செய்வதற்காக சென்ால், சற்று பதற்றமாக இருந்தது. ஆனால், வாக்குச்சாவடியில் தோ்தல் அலுவலா்கள் எனக்கு உற்சாகம் அளித்தனா். ஆட்சியாளரை தோ்வு செய்யும் தகுதி படைத்தவளாக மாறி இருப்பது பெருமை அளிக்கிறது. வாக்குப் பதிவு நடைமுறைகளைப் பாா்க்கும் போது, மிகவும் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் வாக்களித்தவா் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

முகக்கவசம், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முதல் வாக்கை பதிவு செய்தோம். இந்த தோ்தல் மூலம் படித்த இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் அரசு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்கை பதிவு செய்துள்ளோம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com