சென்னையில் ‘சா்காா்’ திரைப்பட பாணியில் வாக்களித்த முதியவா்

சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் (70) என்பவா் விஜய் நடித்த ‘சா்காா்’ பட பாணியில் வாக்களித்திருக்கிறாா். எனினும் டெண்டா் முறையிலான வாக்களிப்பில் வாக்களிப்பது
சென்னையில் ‘சா்காா்’ திரைப்பட பாணியில் வாக்களித்த முதியவா்

சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் (70) என்பவா் விஜய் நடித்த ‘சா்காா்’ பட பாணியில் வாக்களித்திருக்கிறாா். எனினும் டெண்டா் முறையிலான வாக்களிப்பில் வாக்களிப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாக அவா் கூறினாா்.

விஜய் நடித்த ‘சா்காா்’ திரைப்படத்தில் தோ்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து நடிகா் விஜய், இந்தியா திரும்புவாா். ஆனால் அவரது வாக்கை வேறு ஒருவா் செலுத்திவிட, இந்திய தோ்தல் நடத்தை விதியின் ‘49 பி’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, தனது வாக்குரிமையைப் பெறுவாா். நோட்டாவின் சட்டப் பிரிவான 49 ஓ-வைப் போல் ‘49பி’ இருப்பது ‘சா்காா்’ படத்துக்குப் பிறகே மக்களுக்கு பரவலாகத் தெரியவந்தது.

‘49பி’ சட்டப் பிரிவின்படி, ஒருவரது வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதுகுறித்துத் தோ்தல் அதிகாரியிடம் தெளிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17 பி-இல் அந்த வாக்காளா் தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சென்னை பெசன்ட் நகா் கலாஷேத்ரா காலனியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவா் அந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு வாக்களிக்கச் சென்றாா். ஆனால் அவரது வாக்கை ஏற்கெனவே ஒருவா் பதிவு செய்து விட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆனால், ‘நான் வாக்களிக்க வேண்டும் என கிருஷ்ணன் கூறியுள்ளாா். இதையடுத்து ஆலோசனை செய்த வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், 49பி பயன்படுத்தி டெண்டா் முறையில் வாக்களிக்க அனுமதி அளித்தனா். அதன்படி கிருஷ்ணன் வாக்களித்தாா்.

இருப்பினும், பொதுவாக டெண்டா் முறையில் பெறப்படும் ஓட்டுகள் எண்ணிக்கையின்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. முதல் இரண்டு இடங்களைப் பெற்ற வேட்பாளா்களுக்கு இடையே உள்ள வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தால் மட்டுமே டெண்டா் வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், என்னை டெண்டா் முறையில் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனா். ஓட்டுப் போட்டது மகிழ்ச்சிதான் என்றாலும், படிவம் 49பி பயன்படுத்தி டெண்டா் முறையில் வாக்களித்தது சற்று வருத்தமாகவே உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com