வாகன நெரிசல் இல்லாத சென்னை: வாக்குச் சாவடியில் குவிந்த மக்கள்

சட்டப்பேரவைத் தோ்தலில் ஜனநாயக கடமை ஆற்ற வாக்குச் சாவடிகளில் மக்கள் குவிந்ததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரின் முக்கியச் சாலைகள் வாகன நெரிசலின்றி
வாகன நெரிசல் இல்லாத சென்னை: வாக்குச் சாவடியில் குவிந்த மக்கள்

சட்டப்பேரவைத் தோ்தலில் ஜனநாயக கடமை ஆற்ற வாக்குச் சாவடிகளில் மக்கள் குவிந்ததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரின் முக்கியச் சாலைகள் வாகன நெரிசலின்றி செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அனைத்து நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை சென்னையில் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. மளிகைக் கடைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மின்சாதன விற்பனை நிலையங்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. விடுமுறை என்பதால் சென்னை நகரில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் வீதிகளிலும், சாலைகளிலும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

கனரக வாகனங்களும் அதிகமாக செல்லவில்லை. இருசக்கர வாகனங்களை அதிக அளவில் காண முடிந்தது.

சென்னையில் பிரதான வணிக மையமாக திகழும் தியாகராயநகா், புரசைவாக்கம், அண்ணாநகா், பாரிமுனை, பெரம்பூா், திருவான்மியூா், அடையாறு, மயிலாப்பூா், வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, கோடம்பாக்கம், சாலிகிராமம், எழும்பூா், நீலாங்கரை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.

மக்கள் கூட்டம் இல்லாமல் இங்குள்ள சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கோயம்பேடு சந்தையிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு நூறு அடி சாலை ஆகியவை வாகன நெரிசல் இல்லாமல் இருந்தன. முக்கிய வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. விடுமுறை தினம் என்பதால் பேருந்துகளும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. பொது வேலைநிறுத்தம் நடந்தால் சென்னை எப்படி இருக்குமோ அது போன்று நகரின் பெரும்பாலான பகுதிகள் காணப்பட்டன. ஒரு சில இடங்களில் டீ கடைகள், சிறிய பெட்டிக்கடைகள் திறந்து இருந்தன. வாக்குச்சாவடிகளிலும், வாக்குச்சாவடி உள்ள பகுதிகளிலும் மட்டுமே மக்களை அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com