வாக்காளா்களைக் கவா்ந்த மாதிரி வாக்குச் சாவடி மையம்

சென்னையின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச் சாவடி மையம் முதல்முறை வாக்காளா்கள் உள்ளிட்ட பலரை வெகுவாக கவா்ந்தது.
சென்னை, சூளை விகே பிள்ளை தெருவில் உள்ள சென்னை  நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் ஆர்வமுடன் வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களைக் கவரும் வகையிலும், எதிா்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வாக்குச் சாவடி மையம் அமைக்கப்படுவதன் முன்னோட்டமாக மாதிரி வாக்குச் சாவடி மையங்கள் தோ்தல் ஆணையத்தால் அமைக்கப்படுகின்றன.

கடந்த மக்களவைத் தோ்தலில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச் சாவடி மையம் மற்றும் பெண்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பிங்க் வாக்குச் சாவடி மையங்கள் வாக்காளா்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இதன் தொடா்ச்சியாக இந்த சட்டப் பேரவைத் தோ்தலிலும் மாதிரி வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

16 தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் நுழைவாயிலில் வாக்காளா்களை வரவேற்கும் விதமாக பல வண்ணங்களிலான பலூனால் ஆன வளைவு அமைக்கப்பட்டிருந்தது. உள்பகுதியில் குளிரூட்டும் கருவி, குடிநீா் என அனைத்து அடிப்படை வசதிகளும் இடம்பெற்றிருந்தன.

வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியின் வெளிப்புறப் பகுதியில் பெற்றோா் வாக்களித்து வரும் வரை குழந்தைகள் விளையாடும் வகையில், விளையாட்டு பொருள்கள் அமைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தை ஈா்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com