சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில்தாம்பரத்தில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை

சென்னை எழும்பூா்- மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னை எழும்பூா்- மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென் மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிக்காக, சென்னை-மதுரை இடையே தேஜஸ் ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் மட்டும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, மதியம் 12:15 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

மறுமாா்க்கமாக, அதேநாள் பிற்பகல் 3 மணிக்கு மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சியில் நிறுத்தப்பட்டு, இரவு 9:15 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

சென்னை எழும்பூரில் புறப்படும் தேஜஸ் ரயில் 300 கி.மீ. அப்பால் திருச்சியில் தான் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ரயில் பயணிகள் கூறியது: தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கின்றனா். இந்த மக்களின் வசதிக்காக, இந்த ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்.

மும்பை சி.எஸ்.டி. - கா்மாலி இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் தாதா் மற்றும் தானே ரயில் நிலையங்களிலும், தில்லி-லக்னோ இடையே இயக்கப்படும் ரயில் காசியாபாத் ரயில் நிலையத்திலும் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையங்கள் தேஜஸ் ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து மிகக்குறைந்த தூரத்தில் உள்ளன. ஆனால், சென்னை எழும்பூருக்கு அடுத்து 330 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியில் தான் தேஜஸ் ரயில் நின்று செல்கிறது. எனவே, இந்த ரயிலை தாம்பரத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com