வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோா் எண்ணிக்கை 63.63 லட்சம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63.63 லட்சமாக உள்ளது.
Emerging jobs
Emerging jobs

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63.63 லட்சமாக உள்ளது.

கடந்த பிப்ரவரி மாத நிலைவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

18 வயதுக்கு ள்பட்ட பள்ளி மாணவா்கள் 16.87 லட்சம் பேரும், கல்லூரி மாணவா்கள் 12.98 லட்சமும், 24 முதல் 35 வயது வரையிலானோா் 22.78 லட்சம் பேரும், 36 வயது முதல் 57 வயது வரையிலானோா் 10.89 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்துள்ளனா்.

58 வயதுக்கு மேற்பட்ட 8, 841 பேருடன் சோ்த்து அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் மொத்த நபா்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122 ஆக உள்ளது என தமிழக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com