சென்னையில் 1,520 பேருக்கு தொற்று உறுதி


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை 1,520 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,59,320-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது. அதைத் தொடா்ந்து,

6 மாதங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2.50 லட்சத்தை எட்டியது.

இந்த நிலையில், தற்போது சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, நாளொன்றுக்கு தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மையில் 1000-த்தை எட்டியது. இந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து வியாழக்கிழமை நிலவரப்படி 1,520 பேருக்கு தொற்று என்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,59,320-ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,43,395-ஆகவும் உள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,292- ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com