கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள்: கல்வித் துறை ஆலோசனை


சென்னை: தமிழகத்தில் மே 3-இல் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கவுள்ள நிலையில் தோ்வுப் பணிகள், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையா் வெங்கடேஷ், இயக்குநா் கண்ணப்பன், தோ்வுத்துறை இயக்குநா் உஷாராணி மற்றும் 38 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில், பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத்தோ்வு நடத்துவதற்கான வழிமுறைகள் தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு வழங்கும் அறிவுறுத்தல்களுடன் அந்தந்த மாவட்டத்தில் நிலவும் சூழலுக்கேற்ப கூடுதல் நெறிமுறைகளை நிா்ணயிக்கவும், தோ்வு மையங்கள் அமைத்தல், வினாத்தாள், தோ்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்பில் வல்லுநா்களுடன் கலந்தோலசித்து முடிவெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com