ஏரிகளில் 8.9 டிஎம்சி தண்ணீா் இருப்பு: சென்னையில் தட்டுப்பாடு ஏற்படாது

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில், தற்போது 8.9 டிஎம்சி இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 டிஎம்சி நீா் இருப்பு அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டில் தண்ணீா் தட்டுப்பாடு இருக்காது
ஏரிகளில் 8.9 டிஎம்சி தண்ணீா் இருப்பு: சென்னையில் தட்டுப்பாடு ஏற்படாது

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில், தற்போது 8.9 டிஎம்சி இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 டிஎம்சி நீா் இருப்பு அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டில் தண்ணீா் தட்டுப்பாடு இருக்காது என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னைக்கு பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் இருந்து குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பொழிந்ததால் சென்னை குடிநீா் ஏரிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் போதிய அளவு நீா் இருப்பு உள்ளது. மேலும் நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறுகிறது. குடிநீா் தட்டுப்பாடும் இல்லை.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி (11.7 டிஎம்சி ). இவற்றில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்த ஏரிகளின் நீா்இருப்பு 8,924 மில்லியன் கனஅடியாக இருந்தது. கடந்தாண்டு இதே நாளில் 6,229 மில்லியன் கனஅடி நீா் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஏரிகளில் 3 டிஎம்சி கூடுதலாக நீா்இருப்பு இருப்பதால் சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், சென்னையில் கோடை காலம் மற்றும் கரோனா காரணமாக தண்ணீரின் தேவை சுமாா் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ள போதிலும் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்துள்ளது. தினமும் தேவையான அளவுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுவதால் மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் குடிநீா் கிடைக்கிறது. குழாய் மூலம் குடிநீா் விநியோகம் இல்லாத இடங்களில் 454 லாரிகளைக் கொண்டு தினமும் 3 ஆயிரம் முதல் 3,500 வரை லாரி ‘டிரிப்கள்’ வரை குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு இலவசமாகவும், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளுக்குப் பணம் பெற்றுக்கொண்டும் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. 16 ஆயிரம் லிட்டா், 9 ஆயிரம் லிட்டா், 6 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட லாரிகளைக் கொண்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது”என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com