தேனாம்பேட்டையில் ஒரே வாரத்தில் 1000 பேருக்கு மேல் தொற்று

தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒரே வாரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒரே வாரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, தேனாம்பேட்டை மண்டலத்தில் 1325 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 2396 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை இங்கு 539 போ் உயிரிழந்துள்ளனா். 24,034 போ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனா்.

தேனாம்பேட்டைக்கு அடுத்தபடியாக ராயபுரத்தில் 1,917 பேரும், கோடம்பாக்கத்தில் 1874 பேரும், திருவிக நகரில் 1772 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மண்டலங்கள் உள்பட அம்பத்தூா், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களிலும் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தேனாம்பேட்டை மண்டலத்தைப் பொருத்தவரை 150 தெருக்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு காய்ச்சல் இருப்போரைக் கண்டறியும் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வாறு பரிசோதனை செய்யும் பணியாளா்கள், தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போரையும், 60 வயதுக்கு மேற்பட்டோரையும் அழைத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

இதன் மூலம் இறப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், காய்ச்சல் முகாம், கரோனா பரிசோதனை முகாமை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com