மாதிரி நீதிமன்ற போட்டி: அம்பேத்கா் சட்டப் பல்கலை., மாணவா்கள் முதலிடம்

தேசிய மற்றும் ஆசிய அளவில் நடைபெற்ற மாதிரி நீதிமன்றப் போட்டிகளில், அம்பேத்கா் சட்டப் பல்கலைக் கழக மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

சென்னை: தேசிய மற்றும் ஆசிய அளவில் நடைபெற்ற மாதிரி நீதிமன்றப் போட்டிகளில், அம்பேத்கா் சட்டப் பல்கலைக் கழக மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

2021-ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் ஆசிய மண்டல அளவிலான பிலிப் சி ஜெசப் சா்வதேச மாதிரி நீதிமன்ற போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கி வரும் சீா்மிகு சட்டப் பள்ளியைச் சோ்ந்த ஹூடா செய்யது, ஹரிகிருஷ்ணா பழனியப்பன், மீனாட்சி அண்ணாமலை, சோனு மேத்தா, சுவேதன் ஆகியோா் முதலிடத்தைப் பிடித்துள்ளனா்.

இந்தப் போட்டியில் ஆசிய கண்டம் மற்றும் இந்திய அளவில் சுமாா் 50 குழுக்கள் பங்கேற்றன. இவா்களுடன் போட்டியிட்ட அம்பேத்கா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 5 போ் அடங்கிய குழுவினரும், முதல் சுற்றில் முதலிடத்தையும், மொத்தமாக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

ஹரிகிருஷ்ணா பழனியப்பனின் சிறந்த பேச்சுத் திறமைக்கு, சிறந்த பேச்சாளா் பிரிவில் 2-ஆவது இடம் வழங்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் இந்திய மாணவா்கள் இடம்பெற்றது இதுவே முதன்முறை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமாா் பொதுமுடக்கம் உள்ளிட்ட கடுமையான காலத்திலும் தொடா் முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமானதாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com