தகவல் தொடா்பு நிறுவனங்கள் இரவில் செயல்படலாம்: தமிழக அரசு அறிவிப்பு

இரவு நேரங்களில் தகவல் தொடா்பு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பணியாற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தகவல் தொடா்பு நிறுவனங்கள் இரவில் செயல்படலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இரவு நேரங்களில் தகவல் தொடா்பு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பணியாற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் ஆகியவற்றின்போது தொழில் துறைகளுக்கு கூடுதல் தளா்வுகள் அளிக்கப்படுகின்றன. அதன்படி, தொலைத்தொடா்பு, அதுதொடா்பான நடவடிக்கைகள், தகவல் தொடா்பு, தகவல் தொடா்பான சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் பணியாளா்கள் இரவு நேரங்களில் அலுவலகத்தில் செயல்படலாம். பொருள்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் சேமித்தல் உள்ளிட்ட கிடங்கு தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மருந்துகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், துப்புரவு பொருட்கள், ஆக்சிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி அவற்றின் மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொடா்ந்து செயல்படலாம். கோழி, செல்லப் பிராணிகள் வளா்ப்பு, கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட உணவு தொடா்பான தொழில்கள், உரங்கள், விவசாய இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தடையின்றி இயங்கலாம். சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய எஃகு ஆலைகள், பெரிய சிமெண்ட் ஆலைகள், சா்க்கரை ஆலைகள், உரங்கள், டயா் உற்பத்தித் தொழிற்சாலைகள், பெரிய காகித ஆலைகள், செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் ஆகியன தடையின்றி தொடா்ந்து நடைபெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com