மதுக்கடைகளை மூடி கரோனா தடுப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்

மதுக்கடைகளை மூடி கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ராமதாஸ்
ராமதாஸ்

சென்னை: மதுக்கடைகளை மூடி கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் கூறியிருப்பது:

கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான இரவுநேர ஊரடங்கு போதுமானதல்ல. மக்களைப் பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மிகவும் முக்கியமாக டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். அதன் மூலம் கரோனா தொற்றிலிருந்தும், 200 வகையான நோய் பாதிப்புகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியும். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கூறியுள்ளாா்.

தொழில் பழகுநா் தோ்வில் இடஒதுக்கீடு முறை தேவை: மேலும், ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘ தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தொழில் பழகுநா்களைத் தோ்ந்தெடுக்கும்போது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதையும், தொழில் பழகுநா் இடங்கள் முழுக்க முழுக்க உள்ளூா்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்படுதையும் உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com