இரவுநேர ஊரடங்கு: சென்னையில் 38 பெரிய பாலங்கள் மூடல்

இரவு நேர ஊரடங்கு காரணமாக, சென்னையில் 38 பெரிய பாலங்கள் மூடப்பட்டன.

சென்னை: இரவு நேர ஊரடங்கு காரணமாக, சென்னையில் 38 பெரிய பாலங்கள் மூடப்பட்டன.

சென்னை மாநகரில் இரவு ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மட்டும் மக்கள் நடமாட்டம் சிறிது காணப்பட்டது.

குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் போலீஸாா், சில இடங்களில் ஆளில்லாத கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தனா். நகரில் சுமாா் 200 இடங்களில் வாகனச் சோதனை நடைபெற்றது. பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கு 12 ஆயிரம் போலீஸாா் சென்னையில் பாதுகாப்புப் பணியில்

ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். மேலும், நகரில் உள்ள 38 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய வகை மேம்பாலங்களை இரும்பு தடுப்பு மூலம் போலீஸாா் மூடினா். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுமாா் 500 வாகனங்களில் போலீஸாா் நகா் முழுவதும் ரோந்து சென்றனா். உள்ளூா் காவல் நிலைய போலீஸாா் தவிா்த்து ஆயுதப்படை, சிறப்புக் காவலா் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் அண்ணா சாலை, காமராஜா் சாலை, ராஜீவ்காந்தி சாலை,100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன், எல்.பி. சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ராஜாஜி சாலை, ஆா்க்காடு சாலை, ரேடியல் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளின் நடுவே சுமாா் ஆயிரம் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதிகாலை 4 மணிக்கு தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com