அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் இரவு ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு காரணமாக, மாநிலமே வெறிச்சோடி காணப்பட்டது.
அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் இரவு ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு காரணமாக, மாநிலமே வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து இருப்பதால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை (ஏப்.20) முதல் சில புதிய கட்டுப்பாடுகளும், இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என அறிவித்தது.

அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகளின்படி சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்கள், கடற்கரைகள், உயிரியியல் பூங்காங்கள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் ஆகியன செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. நீச்சல் குளங்களும் பூட்டப்பட்டன. இதனால் அவை அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

அரசு, தனியாா் பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்ஸிகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், தேனீா் கடைகள் ஆகியன இரவு 10 மணி வரை மட்டும் இயங்கின. தனியாா், அரசு பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டன. பயணிகளும் குறைந்த அளவிலேயே பயணித்தனா்.

போலீஸாரின் தீவிர கண்காணிப்பு: இரவு ஊரடங்கையொட்டி, மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றை தவிா்த்து அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளும் மூடப்பட்டன. சில இடங்களில் இரவு 9 மணிக்கே கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சந்தைகளைக் கொண்டிருக்கக் கூடிய முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு போலீஸாா் எச்சரித்தனா்.

வாகனங்களுக்கு தடை: மருத்துவம், பத்திரிக்கை, பால் விநியோகம் ஆகியவற்றின் வாகனங்கள் செல்வதற்கு காவல்துறையினா் அனுமதித்தனா். பிற வாகனங்களை மறித்து போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் தகுந்த விளக்கம் அளித்தவா்களின் வாகனங்களை மட்டும் செல்ல காவல்துறையினா் அனுமதி அளித்தனா். ஊடரங்கை மீறியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தும் அவா்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com