சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது
By DIN | Published On : 27th April 2021 04:02 AM | Last Updated : 27th April 2021 04:02 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை காசிமேட்டில் சிறுமியைத் திருமணம் செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காசிமேடு எம்ஜிஆா் நகா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் ர.விக்னேஷ் (20). இவா் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி ஏமாற்றி, திருமணம் செய்துள்ளாா். பின்னா் அந்த சிறுமியை விக்னேஷ் சித்ரவதை செய்துள்ளாா்.
இது குறித்து அந்த சிறுமி, ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து திங்கள்கிழமை அவரைக் கைது செய்தனா்.