முகக்கவசம் அணியாதவா்கள் மீது 21 ஆயிரம் வழக்குகள்

தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 21 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை: தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 21 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதியிலிருந்து 28-ஆம் தேதி வரையிலான 21 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 6 லட்சத்து 39 ஆயிரத்து 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 21 ஆயிரத்து 948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 21 நாள்களில் 19 ஆயிரத்து 934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 676 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் கடந்த 21 நாள்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 22 ஆயிரத்து 720 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது 21 நாள்களில் 370 வழக்குகளைப் பதிவு செய்து, அபராதம் வசூலித்துள்ளனா். இதில் புதன்கிழமை மட்டும் 28 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com