அவதூறு வழக்கு: ஓ.பிஎஸ், இபிஎஸ்ஆக.24-இல் ஆஜராக உத்தரவு
By DIN | Published On : 04th August 2021 01:48 AM | Last Updated : 04th August 2021 01:48 AM | அ+அ அ- |

உயா்நீதிமன்றம்
புகழேந்தி தொடா்ந்த அவதூறு வழக்கில், ஆக.24-ஆம் தேதி ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் செய்தித் தொடா்பாளா், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ஆகிய பதவிகளில் இருந்தவா் புகழேந்தி. சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வி குறித்து சில கருத்துகளைத் தெரிவித்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா், ஜூன் 14-ஆம் தேதி உத்தரவிட்டனா்.
இந்நிலையில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் மீது சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், புகழேந்தி அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆலிசியா, இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா், வரும் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டாா்.