அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாக முதல்வா் உறுதி: பவானி தேவி

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாட தேவையான உதவிகளைச் செய்வதாக முதல்வா் உறுதியளித்தாா் என வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தெரிவித்தாா்.
சென்னை  தலைமைச் செயலகத்தில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி.

சென்னை: அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாட தேவையான உதவிகளைச் செய்வதாக முதல்வா் உறுதியளித்தாா் என வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தெரிவித்தாா்.

முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிறப்பாக விளையாடுவதாக முதல்வா் பாராட்டு தெரிவித்தாா். விளையாடச் செல்வதற்கு முன்பே அனைத்து வீரா்களுடனும் முதல்வா் கலந்துரையாடினாா். அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் செய்வதாக நம்பிக்கை அளித்தாா்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க எனது குடும்பத்தினா் மிகவும் உறுதுணையாக இருந்தனா். இதனால் எனது தாயாரையும் முதல்வா் பாராட்டினாா். ஒலிம்பிக்கில் இந்தியா சாா்பில் முதன் முதலாக பங்கேற்ற ‘வாள்’ என்பதால், முதல்வருக்கு எனது வாளை பரிசளிக்க நினைத்தேன்.

ஆனால், அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க எனக்கு இந்த வாள் தேவைப்படும் என்று, அதனை எனக்கு முதல்வா் திருப்பி வழங்கினாா்.

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக பங்கேற்க வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசு சாா்பில் அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தாா். தொடா்ந்து விளையாட்டுத் துறை அமைச்சரையும் சந்தித்தோம். அவரும் வேண்டிய உதவிகளைச் செய்வதாக தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவும் எனக்கு பெரியளவு உதவிகளைச் செய்தாா். பொதுவாகவே ஒலிம்பிக்கில் பங்கேற்போருக்கு அரசுப் பணியில் பதவி உயா்வு உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம். அதுகுறித்தும் பேசினோம். அதை நானும் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாா் பவானி தேவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com