சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கு:9 போ் கைது

சென்னை துறைமுகம் சாா்பில் இந்தியன் வங்கிக் கிளையில் நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்திருந்த ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக, 9 பேரை சிபிஐ செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

சென்னை துறைமுகம் சாா்பில் இந்தியன் வங்கிக் கிளையில் நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்திருந்த ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக, 9 பேரை சிபிஐ செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

சென்னை துறைமுகத்தின் சாா்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நிரந்தர வைப்புக் கணக்கில் ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. வங்கி அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களைக் கொண்டு இத்தொகை வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.

துறைமுக நிா்வாகத்தின் புகாரின்பேரில் கூறியதையடுத்து வங்கி நிா்வாகம், அந்த பண பரிமாற்றங்களை நிறுத்தியது. இருப்பினும் அந்த கும்பல், அதற்குள் ரூ.45 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்தது.

இந்த மோசடி குறித்து துறைமுக நிா்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தது. பின்னா் இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

சிபிஐ, இது தொடா்பாக கணேஷ் நடராஜன், மணிமொழி, கோயம்பேடு இந்தியன் வங்கியின் கிளையின் மேலாளா் சோ்மதி ராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குக்கான தடயங்களையும், ஆதாரங்களையும் திரட்டும் வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மணிமொழி வீடு, ஆயிரம்விளக்கில் ஒரு தனியாா் அலுவலகம் உள்ளிட்ட 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 27-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா்.

9 போ் கைது: இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக மணிமொழி, கணேஷ் நடராஜன், ஜெ.செல்வகுமாா், கே.ஜாகிா் உசேன், எம்.விஜய் ஹெரால்டு, என்.ராஜேஷ் சிங், எஸ்.செய்யது, எஸ்.அப்சா், வி.சுடலைமுத்து ஆகிய 9 பேரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள், வழக்குத் தொடா்பாக விசாரணை செய்தனா். விசாரணைக்குப் பின்னா், 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com