சுதந்திர தின விழா: சென்ட்ரல், எழும்பூரில் கண்காணிப்பு தீவிரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்.பி.எஃப் போலீஸாா்) கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.
சுதந்திர தின விழா: சென்ட்ரல், எழும்பூரில் கண்காணிப்பு தீவிரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்.பி.எஃப் போலீஸாா்) கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.

நிகழாண்டில் 75-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதுபோல, சென்னையில் சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூா், மாம்பலம், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பை தொடங்கியுள்ளனா். முக்கிய நுழைவு வாயிலில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படைசாா்பில், மொத்தம் 120 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் 40 ஆா்.பி.எஃப். காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ரயில்களில் வரும் சரக்குகள், வந்திறங்கிய பாா்சல்களை வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலமாக சோதித்து அனுப்புகின்றனா். இதுதவிர, ரயில்நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெறுகிறது.

எழும்பூா் ரயில் நிலையத்தில் 60 ஆா்.பி.எஃப். காவலா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ரயில் நிலையத்தின் நுழைவுவாயிலில் பயணிகளின் உடைமைகள் சோதிக்கப்படுகின்றன. அதன் பிறகே, ரயில்நிலையத்துக்கு உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல, முக்கிய ரயில்நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com