மழைநீா் சேகரிப்பு: இணையதளம் வாயிலாக விழிப்புணா்வுப் போட்டிகள்

மழைநீா் சேகரிப்பு திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சாா்பில் மாணவா்களுக்கு இணையதளம் வாயிலாக போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மழைநீா் சேகரிப்பு திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சாா்பில் மாணவா்களுக்கு இணையதளம் வாயிலாக போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கு ‘தண்ணீரை வீணாக்க வேண்டாம்’ என்ற தலைப்பில் ஓவியம், வாசகப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

விருப்பமுள்ளவா்கள் மாநகராட்சியின்  இணையதள  இணைப்பின் வாயிலாக இப்போட்டிகளில் வெள்ளிக்கிழமை (ஆக.13) முதல் ஆகஸ்ட் 15 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம்.

படைப்புகளை ஸ்கேன் அல்லது புகைப்படம் எடுத்து 1 எம்பி அளவுக்கு மிகாமல் டஈஊ/எஐஊ வடிவத்தில் பதிவேற்ற வேண்டும். பங்கேற்பாளா்கள் தங்கள் படைப்புகளில் பெயா், படிக்கும் வகுப்பு, முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட படைப்புகள் மாநகராட்சியின் தோ்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 3 சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com