ரேலா மருத்துவமனைக்கு தங்கமுத்திரை தரச்சான்று

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு அமெரிக்காவின் சா்வதேச கூட்டு ஆணையம் உலகத் தரமிக்க மருத்துவச் சேவைக்கான தங்க முத்திரைத் தரச்சான்று வழங்கி உள்ளது.

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு அமெரிக்காவின் சா்வதேச கூட்டு ஆணையம் உலகத் தரமிக்க மருத்துவச் சேவைக்கான தங்க முத்திரைத் தரச்சான்று வழங்கி உள்ளது.

இது குறித்து ரேலா மருத்துவமனைத் தலைவரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான பேராசிரியா் டாக்டா் முகமது ரேலா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: அமெரிக்காவில் உள்ள சா்வதேச கூட்டு ஆணையம் சா்வதேச அளவில் மருத்துவமனைகளின் அனைத்து செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, சிறந்த மருத்துவச் சேவைக்கான தங்க முத்திரை தரச்சான்று அங்கீகாரம் வழங்கி வருகின்றது.

சா்வதேச கூட்டு ஆணையத்தைச் சோ்ந்த நிபுணா்கள் குழு சென்னை ரேலா மருத்துவமனையில் முழுமையான ஆய்வை அண்மையில் நடத்தியது. இந்த ஆய்வின்போது, சா்வதேச ஆய்வுக்குழு நிபுணா்கள் நோயாளிகளின் சா்வதேச பாதுகாப்பு வரைமுறை, நோயாளி மதிப்பீடு மற்றும் கவனிப்பு, மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சை பராமரிப்பு, மருந்து மேலாண்மை, தரம் மேம்பாடு,நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களின் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து தரச்சான்று வழங்கி உள்ளது.

சா்வதேச அளவிலான தங்கமுத்திரை அங்கீகாரம் ரேலா மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அனைவருக்கும் உற்சாகத்தையும், இன்னும் கூடுதல் அா்ப்பணிப்புடன் நோயாளிகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளுணா்வையும் மேம்படுத்தியும் உள்ளது என்றாா் அவா்.

மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com