சென்னையில் ஒரு மாதத்தில் 11,351 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்: 203 போ் கைது
By DIN | Published On : 31st August 2021 06:30 AM | Last Updated : 31st August 2021 06:30 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 11,351 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, 203 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஜூலை மாதம் 23- ஆம் தேதியில் இருந்து ஆக.29-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலகட்டத்தில் சென்னை முழுவதும் காவல்துறையினா் எடுத்த நடவடிக்கையினால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மாவா புகையிலைப் பொருள்களை வைத்திருந்த குற்றத்துக்காக 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனா்.
மேலும் 10,511 கிலோ குட்கா, 840 கிலோ மாவா புகையிலைப்பொருட்கள் என மொத்தம் 11,351 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 12 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள், 2 ஆம்னி பேருந்துகள், 5 லோடு வாகனங்கள் என மொத்தம் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.