ஐஐடி மாணவி தற்கொலை: தந்தையிடம் 4 மணி நேரம் சிபிஐ விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அந்த மாணவியின் தந்தையிடம் சிபிஐ அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அந்த மாணவியின் தந்தையிடம் சிபிஐ அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

கேரள மாநிலம், கொல்லத்தைச் சோ்ந்த பாத்திமா, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுநிலை மாணவி. கடந்த 2019 நவம்பா் 9-இல், ஐஐடி விடுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாணவி பாத்திமாவின் கைப்பேசி, மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், மாணவியின் தற்கொலைக்கான காரணங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தனது மகளின் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அதை ஐஐடி நிா்வாகம் மூடி மறைப்பதாக கூறி மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் காரணமாக பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை கடந்த 2019 டிசம்பா் 15-ம் தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது தொடா்பாக சிபிஐ, தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

4 மணி நேரம் விசாரணை: இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடா்பாக கூடுதல் தகவல்களைப் பெற நேரில் ஆஜராகும்படி சிபிஐ அதிகாரிகள் அப்துல் லத்தீப்புக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தனா். அதை ஏற்று, அப்துல் லத்தீப் சென்னை, பெசன்ட் நகா், ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அப்போது, தனது மகளின் இறப்பு குறித்து அனைத்து சந்தேகங்ககளுக்கான ஆவணங்கள், தற்கொலைக்கு முன்னா் மகள் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் சிபிஐ அதிகாரிகளிடம் காண்பித்தாா். லத்தீப்பிடம் காலை 10.30 மணி முதல் மதியம் 2.45 மணி வரை சுமாா் 4 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் பல கட்டங்களாக விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com