முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
நாளை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 10th December 2021 02:00 AM | Last Updated : 10th December 2021 02:00 AM | அ+அ அ- |

சென்னை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம், குடிநீா் வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இது குறித்து சென்னைக் குடிநீா் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னைக் குடிநீா் வாரிய குறைதீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 15 குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.
இதில் குடிநீா், கழிவுநீா் தொடா்பான பிரச்சினைகள், குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் குறித்த சந்தேகங்களை நேரில் மனுக்களாக கொடுத்துப் பயன்பெறலாம். மேலும், மழைநீா் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விளக்கங்களையும் கேட்டுப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.