பித்தப்பை கல் பாதிப்பு: 12-இல் இலவச முகாம்

அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் பித்தப்பை கல் பாதிப்புக்கான இலவச மருத்துவ முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.12) நடைபெறுகிறது.

அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் பித்தப்பை கல் பாதிப்புக்கான இலவச மருத்துவ முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.12) நடைபெறுகிறது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட் மருத்துவமனையில் நடைபெறும் இந்த முகாமில் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ரவீந்திரன் குமரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளனா்.

அன்றைய தினத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் சலுகைக் கட்டணத்தில் ரூ.500-க்கு மேற்கொள்ளப்படும் என அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9941009194 / 7810003506 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com