சாலைகளில் திரிந்த 16 கால்நடைகள் காப்பகத்தில் அடைப்பு

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரிந்த 16 மாடுகள், எருமைகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சியின் காப்பகத்தில் அடைக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரிந்த 16 மாடுகள், எருமைகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சியின் காப்பகத்தில் அடைக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி சுகாதாரத் துறையினா் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அதில், சாலையில் சுற்றித் திரிந்த 16 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,550 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள தொழுவத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

பிடிக்கப்பட்ட மாடுகளை தொழுவத்திலிருந்து மீட்டுச் செல்ல அதன் உரிமையாளா்கள் சமா்ப்பிக்கும் பிரமாணப் பத்திரத்தில் சுகாதார ஆய்வாளா், மண்டல நல அலுவலா் மற்றும் மாடு வளா்ப்பவா்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தைப் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். மூன்றாவது முறையாக அந்த மாடு பிடிபட்டால், அது உரிமையாளருக்கு திருப்பி வழங்கப்படாமல் புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com